மன்மத லீலை...மறுத்த மாளவிகா!

By Staff

Malavika
அதுக்குள்ள உச்ச கட்ட கற்பனைக்குப் போயிடாதீங்க... இது ஒரு சிம்பிள் மேட்டர்தான்!

மன்மத லீலை என்ற பெயரில் மங்கை அரிராஜன் இயக்கும் படத்தில் நடிக்க தற்காலிகமாக மறுத்துவிட்டாராம் மாளவிகா.

மாளவிகா இப்போது குழந்தை பெற்றுக் கொண்டு ஓய்வில் இருக்கிறார். அவரது குழந்தை வளர்ந்ததும் மீண்டும் கோடம்பாக்கத்தில் குத்தாட்டம் போடத் தயார் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார் அவர்.

இந்த நிலையில் அய்யர் ஐ.பி.எஸ், பெருமாள்சாமி, பொள்ளாச்சி மாப்ளே ஆகிய படங்களை இயக்கிய மங்கை அரிராஜான் மன்மத லீலை எனும் படத்தில் நடிக்க மாளவிகாவிடம் கால்ஷீட் கேட்டாராம்.

அதற்கு 'குழந்தை இப்போது சின்னவனாக இருக்கிறான். இன்னும் 3 மாதங்கள் போனால் வளர்ந்துடுவான். அதன் பிறகு மன்மத லீலையில் நிச்சயம் நடிக்கிறேன்', என அன்புடன் சொல்லி அனுப்பினாராம் மாளவிகா. ஆனால் அதுவரை காத்திருக்க அரிராஜன் தயாராக இல்லை. எனவே, மாளுவுக்கு பதில் தேஜாஸ்ரீயை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

மன்மத லீலை படத்தில் 5 புதுமுக கதாநாயகர்களும், 5 கவர்ச்சி கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். கீர்த்தி சாவ்லா, மோனிகா, அக்ஷயா, ஸ்வேதா மேனன் மற்றும் தேஜாஸ்ரீ கதாநாயகிகள்.

இதே பெயரில் பாலச்சந்தர் முன்பு கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கினார். இப்போது, அந்தப் படத்தின் தலைப்பை மட்டும் அரிராஜன் பயன்படுத்திக் கொள்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X