கோவளத்தில் 'குடிசை' கட்டும் மல்லிகா!

மல்லிகா ஷெராவத் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா... பல பேரை அவர் தனது அழகால் அடித்து வீழ்த்தினாலும், அவரை அசர வைத்துவிட்டது கேரளாவின் இயற்கை அழகும், சர்வதேச புகழ்மிக்க அதன் கடற்கரைகளும்தான்.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கேரளாவுக்குதான் வந்து தங்குகிறார் மல்லிகா.
அடிக்கடி கேரளா வரும் தனக்கு இயற்கையையும், கடல் அலைகளையும் பார்த்து ரசிக்க வசதியாக இப்போது கோவளம் கடற்கரையையொட்டியுள்ள விழிஞம் என்ற இடத்தில் அரபிக் கடல் அலைகள் உரசும் பகுதியில் சிறு குடில் ஒன்றை அமைத்து வருகிறார். மணல் பரப்பில் மூங்கில், தென்னை ஓலைகள் கொண்டு இந்த சிறு குடிலை கட்டி வருகிறார்.
மல்லிகாவின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ஒரு கேரளாக்காரர்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தவர். இப்போது அவரே முன்னின்று இந்த வீட்டுப் பணிகளை கவனித்து வருகிறார்.
கடற்கரை அருகே உள்ள சிறு மலைக் குன்றுக்கு மேல் இந்த வீடு அமைக்கப்படுகிறது. இதில் ஒரே ஒரு படுக்கை அறையும், சிறிய வரவேற்பறையும் மட்டும்தான் இருக்குமாம்.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இனி இங்குதான் தங்கப் போகிறாராம் மல்லிகா.
தற்போது நாகின் படத்தின் ஷூட்டிங்குக்காக கேரளா வந்துள்ள அவர், குடில் அமைக்கும் பணிகளை நேரில் பார்க்க கோவளம் வந்துள்ளாராம். அநேகமாக அவர் மும்பை கிளம்புவதற்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடுமாம்.
ஒரு பணக்கார குடிசை உருவாகிறது!


Click it and Unblock the Notifications











