'கிஸ்'ஸை திரும்பக் கேட்கும் மாயா!

இதென்ன கலாட்டா என்கிறீர்களா. தொடர்ந்து படியுங்கள்.
கேரளத்து அழகி மாயா உண்ணி, தமிழுக்கு வந்துள்ளார் மிட்டாய் படம் மூலம். முதல் படம் என்பதால் கவர்ச்சியில் சற்றும் வஞ்சம் வைக்கவில்லை மாயா.
படத்தில் முத்தக் காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக ஹீரோவுக்கு அழகழகாக முத்தம் கொடுத்து நடித்துள்ளார் மாயா.
இது அவரது வீட்டுக்குத் தெரிய வரவே, என்ன கொடுமை மாயா இது என்று கோபமாகி விட்டார்களாம். இதெல்லாம் கூடாது, இப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்றால் நீ நடிக்கவே வேண்டாம் என்று முதலுக்கே மோசம் போல பேச ஆரம்பித்து விட்டனராம்.
அப்செட் ஆகி விட்டார் மாயா. சினிமாவுக்காக அம்மா, அப்பாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்த மாயா, முத்தம் கொடுத்து நடித்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கி விடுமாறு இயக்குநரிடம் கெஞ்சலாக கோரிக்கை வைத்துள்ளாராம்.
இயக்குநர் முத்தக் காட்சிகளை நீக்குவாரா அல்லது கொடுத்த பொருள் 'ரிட்டர்ன்' கிடையாது என்று கூறுவாரா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











