'ஐட்டம்' விரும்பும் மீனாட்சி!

கருப்பசாமி குத்தகைதாரர்தான் மீனாட்சியின் அறிமுகப் படம். குடும்ப பாங்காக இருக்காப்ல என்று எல்லோரும் சிலாகித்துப் பாராட்டினர் மீனாட்சியின் நடிப்பையும், தோற்றத்தையும்.
ஆனால் இப்போது மீனாட்சியைப் பார்ப்போர் சற்றே திகிலடித்துப் போய் விடுவார்கள். காரணம் கிளார் பொம்மையாக மாறி விட்டார் மீனாட்சி.
படத்துக்குப் படம் கிளாமர் வேடத்தில் நடிக்க விருப்பமாக உள்ளாராம். அதை விட முக்கியமாக ஐட்டம் பாட்டுக்களையே அதிகம் விரும்புவதாகவும் கூறி அதிரடிக்கிறார்.
ஏன் அப்படி என்று அப்பாவித்தனமாக நாம் கேட்டால், ஐட்டம் பாட்டுக்கு ஆடும்போதுதான் நான் அழகாக இருக்கிறேன். நடிப்பதை விட ஐட்டம் பாட்டுக்கு ஆடுவதை சந்தோஷமாக உணர்கிறேன் என்கிறார்.
இப்போது சிம்புவுடனும், தோரணை படத்தில் விஷாலுடனும் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளாராம் மீனாட்சி.
கையில் படம் ஏதும் இல்லையாம்மா என்று கேட்டால், யார் சொன்னது. ராகவ லாரன்ஸுடன் ராஜாதி ராஜா, பெருமாள், பள்ளிகொண்டாபுரம் என கை நிறையப் படங்கள் இருக்கின்றன என்கிறார் செல்லக் கோபத்துடன்.
தனது தனிப்பட்ட சந்தோஷத்திற்காகத்தான் குத்துப் பாட்டுக்கு ஆசைப்படுகிறாராம்.
ஆடிட்டுப் போகட்டுமே, விடுங்கப்பா...


Click it and Unblock the Notifications











