நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நக்ஷத்திரா தமிழில் அறிமுகமாகிறார்.

சுமித்ராவும் உமாவும் எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்து வந்தனர். சுமித்ரா அம்மா வேடங்களில் நடிக்கிறார். உமா கடைசி வரை கவர்ச்சி காட்டாமல் நடித்து, இப்போது திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.
ஆனால் நக்ஷத்திரா, இந்த மாதிரி குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்காமல் தெலுங்குப் படங்களில் கவர்ச்சியில் தூள் கிளப்பி வருகிறார். தமிழிலும் கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க தனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் அம்மாவையும் அக்காவையும் போல இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் ரூட்டே வேற. கவர்ச்சி இருக்கும் வரை ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். தெலுங்கில் பிஸியாக உள்ளேன். இருந்தாலும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன்..." என்கிறார்.
Comments
அறிமுகம் சுமித்ரா மகள் நக்ஷத்திரா வருசநாடு ஹீரோயின் nakshathra new film sumithra daughter varushanadu


Click it and Unblock the Notifications