பாக். படத்தில் நந்திதா தாஸ்!

இந்தி, பெங்காலி, தமிழ், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் முதல் முறைாக கரை தாண்டி பாகிஸ்தான் படத்தில் நடிக்கப் போகிறார்.
மெஹ்ரீன் ஜாபர் இயக்கும் இப்படத்தில் நந்திதா தாஸ் இந்து தலித் பெண்ணாக வருகிறார். 7 வயது குழந்தையின் தாயார் கேரக்டர் நந்திதாவுக்கு.
இந்தக் கதை பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. சம்பா என்ற பெயரில் வரும் நந்திதா தாஸ், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் கிராமங்களில் வசிக்க நேரிடுகிறது. அவரது மகனும், கணவரும் கட்ச்சில் உள்ள சிறையில் அடைபட நேரிடுகிறது.
தலித் பெண்கள் படும் அவதியை இப்படத்தில் சித்தரித்துள்ளாராம் மெஹ்ரீன். இப்படத்தில் நடிப்பது குறித்து நந்திதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மெஹ்ரீன் பாகிஸ்தானின் சிறந்த பெண் இயக்குநர்களில் ஒருவர். அவர் சொன்ன கதை மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால்தான் நடிக்க உடனே ஒத்துக் கொண்டேன். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் நந்திதா.


Click it and Unblock the Notifications











