நமீதாவுக்கு புதுப் பட்டம்: 6 அடி உயர ஆல்கஹால்!

புதுமுகங்கள் பாலா-விசாகா ஜோடியாக நடிக்க உருவாகும் வைகை படத்தின் ஆடியோவை வெளியிட்ட நமீதாவுக்கு, 6 அடி உயர ஆல்கஹால் என்ற புதிய பட்டத்தை ரசிகர்கள் வழங்கினர்.
1985-ம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகும் வைகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிரீன்பார்க் ஹோட்டலில் நடந்தது. ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டதால் விழா அரங்கம் நிரம்பி வழிந்தது.
அப்போது சிறப்பு விருந்தினராக, கிக்கேற்றும் சிக் உடையில் கலந்து கொண்டார் நமீதா. அத்தனை பேரின் கண்களும் வைகையிலிருந்து தடம் புரண்டு நமீதா விழுந்து எழுந்தது. வந்திருந்த ரசிகர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.
பாடல் வெளியீட்டு விழா முடிந்ததும் இயக்குநர் ராமநாராயணனுக்கு 'எளிமையின் சின்னம்' என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள்.
அடுத்து, "பார்த்ததும் கிக்கேற்றும் நமீதாவுக்கு, '6 அடி உயர ஆல்கஹால்" என்ற பட்டம் வழங்குவதாக அறிவிக்க, ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.
இந்தப் பட்டப் பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொண்ட நமீதா, இந்தப் பெயர் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தனது ஸ்டைல் தமிழில் அனைத்து 'மச்சான்'களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனும் படத்தயாரிப்பாளருமான மு.க.தமிழரசு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், மனோஜ்குமார், ஹரிராஜன், அழகன் தமிழ்மணி, விஜயமுரளி, டைரக்டர் ராதாபாரதி, வசனகர்த்தா ஈ.ராமதாஸ், நடிகர்கள் விஜயகுமார், உதயா, கஞ்சா கருப்பு, ஷியாம் கணேஷ், இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











