'கிஸ்' வெறுக்கும் நேஹா ஓபராய்

By Staff

Neha Oberoi
கிளாமராக நடிக்க ரெடி. ஆனால் முத்தக் காட்சிகளில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் பாலிவுட்டின் புதிய பறவை நேஹா ஓபராய்.

தஸ் கஹானியா படத்தின் நாயகிதான் நேஹா ஓபராய். தற்போது உட்ஸ்டாக் வில்லா என்ற படத்தில் நடித்துள்ளார். ரேஷ்மா என்ற கேரக்டரில் படு ஜோராக நடித்துள்ளாராம். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

அந்த சந்தோஷத்தில் இருக்கும் நேஹா ஓபராய், கிளாமராக நடிக்க தான் எப்போதும் தயங்குவதே இல்லை என்று கூறுகிறார். கிளாமராக நடிக்க நான் ரெடி. ஆனால் முத்தக் காட்சிகள் மட்டும் வேண்டாம் என்கிறார் நேஹா.

இதுகுறித்து நேஹா கூறுகையில், நான் கவர்ச்சிகரமான பெண். எனவே கவர்ச்சிகரமான காட்சிகள் எனக்குப் பொருத்தமாக இருக்கும். கண்டிப்பாக கவர்ச்சிகரமாக நடிப்பேன். அதேசமயம், அழுத்தமான முத்தக் காட்சிகள் எனக்குப் பிடிக்காது. அதில் எனக்கு அசவுகரியங்கள் அதிகம் உள்ளது. அதேபோல ஆடைகளை அவிழ்த்துப் போட்டு ஆபாசமாக நடிப்பதும் எனக்குப் பிடிக்காது என்கிறார் நேஹா.

உட்ஸ்டாக் வில்லா படத்தில் இவர் சிறிய நகரிலிருந்து மும்பைக்கு வந்து மாடலாகவும், நடிகையாகவும் உயரும் கேரக்டரில் நடித்துள்ளாராம் நேஹா. ஜோடியாக நடித்திருப்பவர் பிரபல நடிகர் அனுபம் கெரின் மகன் சிக்கந்தர் கெர்.

நேஹா அடுத்து சஞ்சய் தத்துடன் சேர்ந்து நடிக்கப் போகிறாராம். இப்போதே அதற்காக தயாராகி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X