ஸ்ரீசாந்த்துடன் ஷ்ரியா காதல்?

ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாடுகிறாரோ இல்லையோ, நடிகைகளுடன் சேர்த்து பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறார். ஒரு நாள் இந்த நடிகை, அடுத்த நாள் அந்த நடிகை என்று படு வேகமாக அவரது காதல் பெளலிங் செய்திகள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
லட்சுமி ராயுடன் முதலில் கிசுகிசுக்கப்பட்டார் (பின்னர் ராய் டோணியுடன் கிசுகிசுக்கப்பட்டது தனிக் கதை). அடுத்தடுத்து மேலும் சில நடிகைகளை இவருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது ஷ்ரியாவுடன் இணைத்துப் பேசப்படுகிறார் ஸ்ரீசாந்த்.
மும்பையில் நடந்த பேஷன் ஷோவின்போது இருவரும் சந்தித்துக் கொண்டனராம். நீண்ட நேரம் கடலை போட்டபடி இருந்தனராம். பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிட்டதாகவும், பிறகு காரில் இருவரும் சேர்ந்து எஸ்கேப் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இப்போது ஸ்ரீசாந்த்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தள்ளிக் கொண்டிருக்கிறாராம் ஷ்ரியா. இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டிருப்பதாக மும்பையில் கிசுகிசுக்கிறார்கள்.
உண்மையா மேடேம் என ஷ்ரியாவிடம் கேட்டால், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் தீபா மேத்தா இயக்கத்தில் முக்கிய கேரக்டரில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சிந்தனையில் மட்டும்தான் இருக்கிறேன்.
எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இப்படி சிலர் வதந்தி கிளப்பி விட்டு்ளனர்.
நான் கிரிக்கெட் பார்த்தே பல காலமாகிறது. ஸ்ரீசாந்த்துடன் பேசியது கூட கிடையாது. இதெல்லாம் டூப் நியூஸ், நம்பாதீங்க என்றார் வேகமாக.
நம்புறோம்.


Click it and Unblock the Notifications











