'சைக்கோ' ப்ரியாமணி!

பருத்தி வீரனுக்கு முந்தைய பிரியா மணி, சீ்ண்டுவாரின்றி இருந்த கோவில் மணி நிலையில் காணப்பட்டார். ஆனால் பருத்தி வீரன் வந்து பிரியா மணியின் வறண்ட மார்க்கெட்டை வற்றாத ஜீவநதியாக்கி விட்டது.
தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியாமணி, பருத்தி வீரனில் நடித்துக் கொண்டிருந்தபோது விரக்தியான மன நிலையில் இருந்தாராம். படம் மட்டும் ஓடாவிட்டால் பேசாமல் சைக்காலஜி படிக்கப் போய் விடலாம் என திட்டமிட்டிருந்தாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பருத்தி வீரன் ஓடாவிட்டால் பேசாமல் நடிப்பை விட்டு விட்டு சைக்காலஜி படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பருத்தி வீரன் வந்து நிலையை மாற்றி விட்டது.
பருத்தி வீரனில் நடித்ததைப் போன்ற கிராமத்து வேடங்களில் இனி நடிக்க மாட்டேன் என நான் கூறியதாக கூறப்படுவது தவறு. அப்படியெல்லாம் நான் கூறியதேயி்ல்லை.
அதே டைப் கேரக்டர் உடனடியாக வேண்டாம் என்றுதான் நான் கூறியிருந்தேன் என்று கூறும் பிரியா மணி, மணிரத்தினத்தின் அசோகவனத்திலும் நடிக்கிறார். எனது கேரக்டர் இன்னும் முடிவாகவில்லை. முடிவானவுடன்தான் அதுகுறித்து தெரியும் என்கிறார் பிரியா மணி.
ஆனால் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் பிரியா மணி நடிக்கப் போவதாக கோலிவுட் கிசுகிசு கூறுகிறது. ராமாயாணத்தின் உல்டாதான் அசோகவனம் என்பது தெரிந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











