மீண்டும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது! - சொல்கிறார் ப்ரியாமணி

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான படம் திரைக்கதா. மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
இந்தப் படத்தில் ஸ்ரீவித்யா வேடத்தில் நடிகை ப்ரியாமணி நடித்திருந்தார். 80களில் ஸ்ரீவித்யாவின் தோற்றம், நடிப்பு, நடை, உடை, பாவனை போன்றவைகளை அடிப்படையாக கொண்டு அவர் நடித்திருந்தார். இதனால் இம்முறையும் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூப்படுகிறது.
இதுகுறித்து ப்ரியாமணி கூறியதாவது:
ஸ்ரீவித்யா கெட்டப்பில் நடித்ததற்காக மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து என்னை வாழ்த்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஏற்கெனவே பருத்திவீரன் படத்துக்கு தேசிய விருது பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த தகவல் இன்னும் என்னை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மணிரத்னம் இயக்கும் அசோகவனம் படத்தின் மூலம் இந்தியில் நுழைகிறேன். தொடர்ந்து அங்கும் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.
தமிழில் நான் நடித்துள்ள ஆறுமுகம் இப்போது திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் துரோனா மற்றும் என்.டி.பாலகிருஷ்ணா படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது என்றார் ப்ரியாமணி.


Click it and Unblock the Notifications











