பெண் சிங்கம்... ரம்பா அவுட்!

Rambha
முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் நடிகை ரம்பா.

வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்த ரம்பாவுக்கு கலைஞர் டிவி மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்க பெரும் தொகை கொடுக்கப்பட்டது.

பின்னர் மீரா ஜாஸ்மின் நடிக்க பாலி ஸ்ரீரங்கம் இயக்கும் பெண் சிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார் நடிகை ரம்பா.

படப்பிடிப்பும் நடந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட தனது தாயார், சகோதரருடன் போய் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ரம்பா.

இந்த நிலையில் அவர் பெண்சிங்கம் படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். மலையாளப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ரம்பா அடிக்கடி கேரளா போய்விடுவதால், பெண் சிங்கத்துக்கு சரியான முறையில் ரம்பாவால் ஒத்துழைப்பு தர முடியவில்லையாம்.

எனவே அவரை படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு பெண்சிங்கம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ரம்பாவோ, மலையாளப் படத்தில் நடிக்க இருந்ததால், இந்தப் படத்திலிருந்து நானேதான் விலகிக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

ரெண்டு தரப்பு சொல்றதையும் அப்படியே நம்புறோமுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X