'ஸ்லிம்' ராணி!

பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவர் ராணி முகர்ஜி. இடையில் உடம்பு பெருத்துப் போகவே பட வாய்ப்புகள் மங்கத் தொடங்கின.
முதலில் பட வாய்ப்புகள் மங்கத் தொடங்கியதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்து வந்தார் ராணி. பிறகுதான் தனது உடல்தான் படங்கள் வராமல் போக காரணம் என்பதை அறிந்த தனது தோஸ்த் ஆன ஆமிர்கானை அணுகி ஆலோசனை கேட்டார்.
அவர் தனக்கு '6 பேக்' பயிற்சி அளித்த பிட்னஸ் மாஸ்டர் சத்யதேவ் செளராஸியாவிடம் அனுப்பி வைத்தார் ராணியை. அவரது ஆலோசனையின்பேரில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தொடங்கினார் ராணி. விளைவு, இப்போது ஸ்லிம் ராணியாக மாறியுள்ளார்.
அவரை இப்போது பார்ப்பவர்கள் வியந்து போகும் அளவுக்கு மெலிந்திருக்கிறார் ராணி.
இந்த சூட்டோடு தில் போலே ஹடிப்பா என்ற படத்தில் பிகினி உடையில் வந்து கலக்கப் போகிறாராம் ராணி.
இதில் விசேஷம் என்னவென்றால் ஆண் சீக்கிய கிரிக்கெட் ஆட்டக்காரராக இப்படத்தில் வருகிறார் ராணி. அந்த வேடத்தில், ராக்கி சாவந்த்தை அவர் மயக்கி தனது வலையில் வீழ்த்த முயல்வாராம்.


Click it and Unblock the Notifications











