சோஹா போஸ்-சைஃப் அப்செட்!

By Staff

Soha Ali Khan
மேக்ஸிம் இதழுக்கு சோஹா அலி கான் கொடுத்துள்ள பலான போஸ்களால், அவரது அண்ணனும், நடிகருமான சைஃப் அலிகான் செம அப்செட் ஆகியுள்ளாராம்.

மேக்ஸிம் இதழ் தனது ஒவ்வொரு எடிஷனிலும், ஒரு நடிகையின் அரைகுறை, கிளாமர் படங்களைப் பிரசுரித்து வருகிறது. இதில் கலந்து கொண்டு குண்டக்க மண்டக்க போஸ் கொடுப்பதில் நடிகைகளிடையேயும் நல்ல ஆர்வம் உள்ளது.

பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள்தான் இப்படி போஸ் கொடுத்து வருகின்றனர். இந்த இதழ்தான் தனது முதல் பதிப்பில் நடிகை குஷ்புவின் பழைய பலான படத்தைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், சைஃப் அலிகானின் தங்கச்சியும், வளரும் பாலிவுட் நடிகையுமான சோஹா அலி கான் படு செக்ஸியாக கொடுத்துள்ள போஸ்களை லேட்டஸ்ட் மேக்ஸிம் இதழில் வெளியாகி சூட்டைக் கிளப்பியுள்ளன.

சோஹா கொடுத்துள்ள பல போஸ்கள் அரை நிர்வாணத்திற்கு அருகில் உள்ளவையாகும். படு கிளாமராக உள்ள இந்த படங்களைப் பார்த்து விட்டு சைஃப் அலிகான் டென்ஷனாகி விட்டாராம். தங்கையுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

சைஃபின் கோபத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய தாயார் சர்மிளா தாகூர், இனிமேல் இதுபோல சோஹா போஸ் கொடுக்க மாட்டார் என சைஃபை சமாதானப்படுத்தினாராம்.

தற்போது மனம் இறங்கி வந்துள்ள சைஃப் தனது தங்கையை நாயகியாகப் போட்டு ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம். இதற்காக நல்ல இயக்குநரைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.

சைஃப்பின் இப்போதைய காதலி கரீனா கபூரும் இதே போல போஸ்கள் தந்து கொண்டிருக்கிறார். அது குறித்து சைப் பாராமுகமாகவே இருக்கிறார்.

ஏனோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X