சங்கீதா கல்யாணத்திற்கு ரெடி!

ரசிகா என்ற பெயரில் அறிமுகமாகி கவர்ச்சி களியாட்டம் ஆடி வந்த சங்கீதா, இடையில் மார்க்கெட் சுணங்கி தெலுங்குப் பக்கம் தலை காட்டி வந்தார்.
அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்த சங்கீதாவுக்கு பிதாமகன் மறு முகவரி கொடுத்தது. ஆனால் பெரும் பிரேக் ஆக அமைந்தது உயிர்தான். அப்படத்தில் அவர் ஏற்று நடித்த காம வெறி கலந்த கதாபாத்திரம், சங்கீதாவுக்கு பெரும் உயிர் கொடுத்ததால் மளமளவென சில படங்களில் புக் ஆனார்.
படங்கள் தவிர டிவியிலும் சங்கீதா பிசியானார். ராஜ் டிவியில் ஒரு கேம் ஷோவை நடத்தி வந்த சங்கீதா, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன்னில் நடுவராகவும் செயல்படுகிறார்.
இடையில் காளை படத்தில் தேவையில்லாமல் அவர் நடித்த ரோல், அவரது மார்க்கெட்டை சுத்தமாக இழுத்து மூடி விட்டதாம்.
முன்பு போல படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் தீர்மானித்துள்ளனர். முதலில் வேண்டாம் என்று கூறிய சங்கீதா இப்போது ஓகே. சொல்லி விட்டாராம். இதையடுத்து விறுவிறுப்பாக மாப்பிள்ளை பார்க்கும் படம் நடந்து கொண்டிருக்கிறதாம்.
வீட்டில் எந்த மாப்பிள்ளையைப் பார்த்தாலும் கட்டிக் கொள்ளத் தயாராக இருப்பதாக சங்கீதா கூறி விட்டாராம்.
சமத்து!


Click it and Unblock the Notifications











