'பஞ்சாமிர்தம்' சரண்யா!

By Staff

Saranya Mohan
யாரடி நீ மோகினியில் நயனதாராவின் தங்கச்சியாக கலக்கிய சரண்யா மோகன், தனி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். ஹீரோயினாக நடிக்கும் முதல் படமே 'பஞ்சாமிர்தம்' என்பதால் தித்திப்பான வரவேற்பு கிடைக்கும் என்ற பலமான நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.

யாரடி நீ மோகினியில் நயனதாராவின் தங்கையாக நடித்தவர்தான் சரண்யா மோகன். இவரும் கேரளாதான். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்திழுத்தார் சரண்யா. குறிப்பாக பாலக்காட்டு பக்கத்திலே பாட்டில் இவரது நளினமும், நடனமும், நவரசமும் ரசிகர்களை ஈர்த்தது.

யாரடி நீ மோகினி கொடுத்த பூஸ்ட்டால் இப்போது சரண்யா தனி நாயகியாகிவிட்டார். பஞ்சாமிர்தம் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் சரண்யா மோகன். இதுதவிர வெண்ணிலா கபடி குழு, மகேஷ், சரண்யா மற்றும் பலர், ஜெயம்கொண்டான் படங்களிலும் சரண்யா இடம் பெற்றிருக்கிறார்.

இருப்பினும் பஞ்சாமிர்தத்தில் மட்டுமே இவர் தனி ஹீரோயின். சமீபத்தில் ஈரம் என்ற படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பஞ்சாமிர்தம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. இதையடுத்து ஊட்டியிலிருந்து ஜில்லென்று சென்னைக்குத் திரும்பியுள்ள சரண்யா, தனது முதல் ஹீரோயின் அனுபவம் சூப்பராக இருப்பதாக கூறுகிறார்.

இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம். இதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தனி நாயகியாக நடிப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பு, மரியாதையை விட இப்போது சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. என்னதான் நடித்தாலும் ஹீரோயினாக நடிக்கும் சுகமே அலாதிதான் என்கிறார் கேரளத்து வசீகரப் புன்னகையுடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X