'ஷராரா ஷராரா' ஷமீதா!

ஷில்பாவைப் போலவே அவரது தங்கச்சி ஷமீதா ஷெட்டியும் பாலிவுட்டை தனது கவர்ச்சியால் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.
பெரிய அளவில் அவரது மார்க்கெட் இல்லை என்றாலும் கூட ஐட்டம் பாட்டு என்றால் கூப்பிடு ஷமீதாவை என்று மணி அடித்துக் கூப்பிடும் அளவுக்கு அவரது மார்க்கெட் மந்தாரமாகத்தான் உள்ளது.
அவர் இதுவரை ஆடிய அத்தனை ஐட்டம் பாட்டுக்களும் கவர்ச்சிகரமானவையாக மட்டுமல்லாமல் சூப்பர் ஹிட் ஆகவும் மாறியுள்ளன.
குறிப்பாக மேரே யார் கி ஷாதி ஹை படத்தில் அவர் பாடிய ஷராரா ஷராரா பாட்டு செம ஹிட். காரணம், அதில் ஷமீதா காட்டிய கவர்ச்சி செம பிட் ஆக இருந்ததுதான்.
இந்தியில், ஷமீதா என்றால் ஷராரா புகழ் ஷமீதா என்றுதான் தெரியும். அப்படி ஒரு ஹிட் பாட்டு அது.
இந்த நிலையில் ஹாரி பட்டர் (ஆங்கில ஹாரி பாட்டர் பட பாணியில், இந்தியில் எடுக்கப்படும் படம்) படத்தில் ஷமீதா ஒரு பாட்டுக்கு ஆடவுள்ளார்.
இந்தப் படம் குழந்தைகளுக்கான படம். குழந்தை நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் படம். இப்படத்தில் ஆட வேண்டும் என்று கோரிக்கை வந்தபோது அதை உடனடியாக ஷமீதா ஏற்றுக் கொண்டாராம்.
குழந்தைகளுக்கான படம் என்பதால் உடனே ஒத்துக் கொண்டேன். இது எனக்கு கெளரவமான விஷயம். எனது பாடலும், ஆட்டமும் குழந்தைகளைக் கவரும் என்கிறார் சந்தோஷமாக.
இதுவரை ஷமீதா போட்ட எந்த ஆட்டமும், சோடை போனதில்லை. எனவே ஹாரி பட்டர் படப் பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











