திருமணமான குந்தராவை மணக்கிறார் ஷில்பா!

லண்டனில் வசித்து வருகிறார் குந்த்ரா அந் நாட்டின் மிகப் பெரிய பில்லியனியர்களில் ஒருவர். இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. மனைவி கவிதாவுடன் இல்லறம் நடத்தி வந்த குந்த்ரா பாலிவுட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இந்த வகையில், லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவரான ஷில்பா ஷெட்டியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் மிக நெருக்கமாகி காதலாக மாறிப் போனது. ஷில்பாவை காதலிக்கத் தொடங்கியதும் கவிதாவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் குந்த்ரா. இருவரும் பிரிந்தனர். ஷில்பாவுடன் குந்த்ராவின் நட்பு மட்டும் மேலும் இறுகியது.
தன்னையும், தனது கணவரையும் ஷில்பா ஷெட்டி பிரித்து விட்டார் என பகிரங்கமாக குற்றம் சாட்டி குமுறியிருந்தார் கவிதா. ஆனால் ஷில்பா இதுகுறித்து மெளனம் சாதித்தார். குந்த்ராதான், கவிதா மீது பாய்ந்தார்.
இந் நிலையில், குந்த்ராவை மணந்து கொள்ள ஷில்பா முடிவெடுத்து விட்டாராம்.
எப்போது திருமணம் என்று கேட்டால், இப்போது என்ன அவசரம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி வந்தவர், இப்போது அடிக்கடி திருமணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.
"தற்போது என் கைவசமுள்ள பொறுப்புகளை முடித்துத் தரவே எனக்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும். அதற்கப்புறம் கல்யாணத்துக்கு 6 மாதங்களாவது டைம் வேண்டாமா... ஆனால் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு, என்கிறார் ஷில்பா.
இப்போது ஷில்பா கைவசம் இந்திப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் வாய்ப்புகளும் நிறைய உள்ளன. விரைவில் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலேஸில் இரண்டு நிமிட சிறப்புக் காட்சியில் தோன்றுகிறார் ஷில்பா.
பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வடிவமான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பும் ஷில்பாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இத்தனைப் புகழ், பணம் சேர்ந்த பின் வாழ்க்கையில் செட்டிலாவதுதானே முறை?


Click it and Unblock the Notifications











