சிம்ரன் தந்த அட்வைஸ் – சிலிர்க்கும் ஷ்ரத்தா

கோலிவுட்டுக்கு வர மொத்தமே ரெண்டு ரூட்தான். ஒன்று கேரளா, இன்னொன்று மும்பை. இதில் ஷ்ரத்தா இந்த இரண்டு ரூட்டையும் டச் செய்கிறார். இவர் கேரளாவில் பிறந்தவராம். மும்பையில் இப்போது வசித்து வருகிறாராம். அதை விட முக்கியமானது, ஷ்ரத்தாவின் அண்டை வீட்டில் வசித்து வந்தவர் சிம்ரனாம்.
ஷ்ரத்தாவுக்கு சின்ன வயதிலிருந்தே நடிப்பு பிடிக்குமாம், ஹீரோயினாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாராம். இதையடுத்து சிம்ரனை அணுகி கேட்டபோது, உனக்கு ஹோம்லியான முகம் இருக்கிறது. தமிழ்தான் உனக்கு சரியான சாய்ஸ், அங்கு போய் முயற்சி செய் என்று அட்வைஸ் செய்தாராம் சிம்ரன்.
இதையடுத்தே தமிழுக்கு வந்து சேர்ந்துள்ளாராம் ஷ்ரத்தா. தற்போது உனக்காக என் காதல் என்ற படத்தின் மூலம் நாயகியாகியுள்ளார் ஷ்ரத்தா. குடும்பப் பாங்கான ரோலாம். சின்னதாக கிளாமரும் இருக்கிறதாம்.
எனக்கு ஹோம்லியான ரோல்கள்தான் பிடிக்கும். இந்தப் படம் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து ஹோம்லியான ரோல்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷ்ரத்தா.


Click it and Unblock the Notifications











