Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சோனியா அகர்வால் வைத்த விருந்து!
தனது பிறந்த நாளையொட்டி முக்கிய நடிகர்கள், இயக்குநர்களுக்கு விருந்து வைத்தார் நடிகை சோனியா அகர்வால்.
இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு முதல்படமாக அமைந்துள்ளது சிம்பு நடிக்கும் வானம்.
இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்துள்ளார் சோனியா அகர்வால். தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகிக்கு இணையான முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களாக அவர் தேர்ந்தெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று அவர் தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.
இதையொட்டி நடிகர்- நடிகைகளுக்கு விருந்து அளித்தார். பிறந்த நாள் மற்றும் திரையுலக மறுபிரவேசம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக இந்த விருந்து என்று கூறி அவர் விடுத்த அழைப்பை ஏற்று சிம்பு உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர்.
சென்னை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்த விருந்து நடந்தது. அனைவருக்கும் சோனியா அகர்வால் தன் கையால் உணவு பரிமாறினார்.