திரிஷாவின் 'கேட் வாக்'

மாலை மயங்கும் வேளை... நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக தாஜ் பால் ரூமுக்குள் நுழைய, வண்ண விளக்குகள் அணைந்து, புகை மண்டலத்தை மீறி ஒரு சின்ன ஒளிக்கீற்று. சில நிமிடங்களில் போகஸ் விளக்குகள் எரிய, பச்சை நிற தேவதையாய் அந்த அரங்கைப் பிளக்கும் கைத்தட்டல் ஒலியில் மிதந்து வருகிறார் ஒரு அழகி.
அட... த்ரிஷா!
தென்னிந்திய சினிமாவின் முதல் வரிசை நாயகியான த்ரிஷா, மீண்டும் பேஷன் மாடலாகி விட்டாரோ... என்ற சந்தேகம் வேண்டாம்.
ஸிட்னி ஸ்லேடன் எனும் பிரபல ஆடை வடிவமைப்பாளர், தான் வடிவமைத்த ஆடைகளுக்காக நடத்திய ஒரு ஆடம்பர அழகிகள் அணிவகுப்பில் தானும் ஒருவராக ஒய்யார நடை போட வேண்டும் என விரும்பி வந்திருந்தார் த்ரிஷா.
இந்த ஸிட்னி ஸ்லேடன் வேறு யாருமல்ல, சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆடைகள் டிசைன் பண்ணிக் கொடுத்தவர்.
இன்றைய நகர இளைஞர் இளைஞிகளின் விருப்பத்துக்கேற்ப ஸிட்னி இந்த ஆடைகளை வடிவமைத்துள்ளார். ஆடைகளின் சிறப்பு அம்சம், அணிபவர்களின் வயதைக் காணாமலடித்துவிடும் அதன் ஸ்டைல்தான்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் கடைசி ரவுண்ட் வரை அங்கேயே இருந்த முன்னாள் மிஸ் சென்னை த்ரிஷா, தானும் அனைத்து ரவுண்டுகளிலும் விதவிதமாய் உடையணிந்து வந்து கலக்கினார்.
பின்னர் பேசுகையில், ஆடை வடிவமைப்பாளர்களில் ஸிட்னி ஒரு மேஜிக் மேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரகஸியா, ரம்யா கிருஷ்ண வம்சி ஆகியோரும் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











