திரிஷாவின் அர்த்தமுள்ள பிறந்தநாள் கொண்டாட்டம்!

By Staff

Trisha
சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் குழந்தைகளுடன் கேட் வெட்டி, பரிசுகள் கொடுத்து, அபியும் நானும் பார்த்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் நடிகை திரிஷா.

நடிகை திரிஷாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர் மன்றமும், திரிஷா பவுண்டேஷனும் இணைந்து அடையாறு கூவம் சாலையில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நடிகை திரிஷா வருகிறார் என்றதும், குழந்தைகள் அவரை ஆர்வத்துடன் வரவேற்கக் காத்திருந்தனர்.

நடிகை திரிஷா வந்தவுடன், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நடிகை திரிஷா பொம்மைகள் வழங்கினார்.

தான் நடித்து வெளிவந்துள்ள அபியும் நானும் படத்தை அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்தார். படம் முடிந்தவுடன் அந்த குழந்தைகளுடன் இரவு உணவும் சாப்பிட்டார்.

திரிஷா தனது பிறந்த நாளை இந்த புற்றுநோய் மருத்துவமனையில் கொண்டாடுவது புதிதல்ல. ஏற்கெனவே தொடர்ந்து இரு ஆண்டுகளாக இங்குதான் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இந்த இடத்தில் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடுவதில் தனக்கு மிகுந்த நிறைவு ஏற்படுவதாக அவர் கூறினார்.

கொண்டாட்டத்துக்கு முன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் 3வது முறையாகபுற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, இங்குள்ள குழந்தைகளை சந்திக்கின்றேன். ஒவ்வொரு வருஷமும் வித்தியாசமான முறையில் இந்த குழந்தைகளுடன் பொழுதை களிப்பேன். அது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இந்த முறை நான் நடித்து வெளிவந்த அபியும் நானும் படத்தை இந்த குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கப்போகிறேன்.

அபியும் நானும் திரைப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. டைரக்டர் ராதாமோகன் சார் படம் என்றதுமே, நான் கதையைக் கூட கேட்காமல் ஒத்துக்கொண்டேன். அந்த படத்தில் நான் நடித்த கேரக்டர் எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது.

நயனுடன் சண்டையா?:

இந்தி சினிமாவில் நடிக்க இப்போது ஆர்வம் இல்லை. தமிழ் படங்களில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதுவரை யாரும் என்னிடம் நடிக்க கேட்கவில்லை. அப்படி வந்தால் அதைப்பற்றி யோசிக்கலாம்.

எனக்கும் நயனதாராவுக்கும் பிரச்சனை என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நான் எதற்காக அவருடன் சண்டை போடப் போகிறேன்.

அடுத்தது, கமல் சாரின் மர்மயோகி படம். இது குறித்து நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். அதை கமல்சாரிடம் தான் கேட்கவேண்டும். அந்த படத்தில் நடிக்க நான் கொடுத்த கால்ஷீட் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

முன்பெல்லாம் நான், படத்தில் நடிக்க ஒரு மாதத்தில், 28 நாட்கள் கால்ஷீட் கொடுப்பேன். ஒருசில படங்களில் நடிக்க கூடுதல் நாட்கள் தேவைப்படும்போது என்னால் கொடுக்க முடியாமல் போனது. இப்போது அப்படி இல்லை. மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே படத்தில் நடிக்கிறேன். மீதம் உள்ள நாட்களில், பிற படங்களில் நடிக்கிறேன். தமிழில் சர்வம் என்ற படத்தில் மட்டும் ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியுள்ளது. புதிதாக எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை, என்றார் திரிஷா.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, திரிஷா பவுண்டேசன் நிறுவனர் எமி மற்றும் துரைராஜ் வசந்தி, பிஆர்ஓ ஜி.பாலன் ஆகியோர் செய்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X