என்னாச்சு விஜயலட்சுமிக்கு?

சென்னை 28 படம் மூலம் ஹிட் ஆன விஜயலட்சுமி தொடர்ந்து அஞ்சாதே படம் மூலம் மெகா ஹிட் ஆனார். தற்போது ரஜினியின் சுல்தான் தி வாரியர், ஜெய்யுடன் அதே நேரம் அதே இடம், கற்றது களவு என நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தன்னைத் தேடி வரும் புதுப் படங்களை அவர் வேண்டாம் என்று கூறி நிராகரித்து வருகிறாராம். நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் புதுப் படங்களை விஜயலட்சுமி தவிர்ப்பதால் கோலிவுட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அவரைத் தேடி நந்தி, நான் அவன் இல்லை-2, மிளகா என சில படங்கள் போனது. விஜயலட்சுமி மறுத்து விட்டதால் அந்தப் படங்களில் வேறு நடிகைகள் தற்போது நடித்து வருகின்றனர்.
விஜயலட்சுமியின் இந்த திடீர் நிராகரிப்பு முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..
Comments


Click it and Unblock the Notifications