twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை ரவீணா டாண்டன் உட்பட 3 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு

    By
    |

    பெரோஸ்புர்: கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக, இந்தி நடிகை ரவீணா டாண்டன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் இரண்டாவது வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் டி.வி.சேனல் ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், இந்தி நடிகை ரவீணா டாண்டன், நடன இயக்குனரும் பட இயக்குனருமான பரா கான், காமெடி நடிகர் பார்தி சிங் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் அவர்கள், கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பேசியதாக அமிர்தசரஸ் போலீசில், கிறிஸ்துவ முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

    வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    இதையடுத்து, மூவர் மீதும், அமிர்தசரஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாரா கான், மன்னிப்புக் கேட்டார். எல்லா மதத்துக்கும் மரியாதை கொடுப்பவள் நான்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    மத உணர்வுகளை புண்படுத்தும்படி நாங்கள் பேசவில்லை. அப்படி பேசியிருப்பதாக நினைத்தால் அனைவர் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    ரவீணாவும்...

    ரவீணாவும்...

    இதையடுத்து ரவீணாவும் மன்னிப்புக் கேட்டிருந்தார். எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அப்படி புண்ணியிருப்பதாக இருந்தால், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    இரண்டாவது வழக்கு

    இரண்டாவது வழக்கு

    இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் கம்போத் நகரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அவர்கள் மீது இரண்டாவது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English summary
    A second FIR has been registered within a week in Punjab against actor Raveena Tandon, director-choreographer Farah Khan and comedian Bharti Singh for allegedly hurting the religious sentiments of a community in a TV show, police said on Sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X