இரட்டைக் கொண்டாட்டத்தில் லாரா தத்தா

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார் பாலிவுட் நடிகை லாரா தத்தா.
இந்திய அணி கோப்பை வென்று புதிய சரித்திரம் படைத்தக் களிப்பில் அனைவரும் இருக்க லாராவுக்கு இரட்டை சந்தோஷம். ஒன்று இந்திய அணியின் 28 ஆண்டு கால கனவு நனவானது. இன்னொன்று தனது கணவர் மகேஷ் பூபதியும், லியான்டர் பயசும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த மயாமி ஓபன் இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றது.
அப்போ இரட்டை சந்தோஷம் இருக்காதா பின்னே!.
இதுகுறித்து லாரா தனது டுவிட்டர் தளத்தில் நேற்று முன்தினம் எழுதுகையில்,
பம்பர் சனிக்கிழமை. எனது கணவர் மயாமி ஓபன் இறுதியில் ஆடுகிறார். நான் இந்திய அணியை உற்சாகப்படுத்த மைதானம் செல்கிறேன். இரண்டு பேருமே வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று எழுதியிருந்தார்.
அவரது பிரார்த்தனை நிறைவேறிவிட்டது.
Comments
பாலிவுட் மகேஷ் பூபதி மயாமி ஓபன் லாரா தத்தா bollywood cricket world cup 2011 lara dutta mahesh bhupathi miami open


Click it and Unblock the Notifications