twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரட்டைக் கொண்டாட்டத்தில் லாரா தத்தா

    By Siva
    |

    Lara Dutta
    டெல்லி: இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை நாடே குதூகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கையில் பாலிவுட் நடிகை லாரா த்த்தாவுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்தது.

    நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார் பாலிவுட் நடிகை லாரா தத்தா.

    இந்திய அணி கோப்பை வென்று புதிய சரித்திரம் படைத்தக் களிப்பில் அனைவரும் இருக்க லாராவுக்கு இரட்டை சந்தோஷம். ஒன்று இந்திய அணியின் 28 ஆண்டு கால கனவு நனவானது. இன்னொன்று தனது கணவர் மகேஷ் பூபதியும், லியான்டர் பயசும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த மயாமி ஓபன் இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றது.

    அப்போ இரட்டை சந்தோஷம் இருக்காதா பின்னே!.

    இதுகுறித்து லாரா தனது டுவிட்டர் தளத்தில் நேற்று முன்தினம் எழுதுகையில்,

    பம்பர் சனிக்கிழமை. எனது கணவர் மயாமி ஓபன் இறுதியில் ஆடுகிறார். நான் இந்திய அணியை உற்சாகப்படுத்த மைதானம் செல்கிறேன். இரண்டு பேருமே வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று எழுதியிருந்தார்.

    அவரது பிரார்த்தனை நிறைவேறிவிட்டது.

    English summary
    Bollywood actress Lara Dutta had 2 reasons to celebrate last night. One was Team India's grand win and the second thing was her hubby Mahesh Bhupathi's win in the Miami open held in Florida, US.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X