ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.. பாகுபலி தேவசேனா ட்விட்!
சென்னை: நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணை 3 மில்லியனை தொட்டதால் ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.
தமிழ் ,தெலுங்கு,கன்னட போன்ற பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல வெற்றி படங்களை தந்த அனுஷ்கா ஷெட்டி, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் .

பல வெற்றிகளை தந்த அனுஷ்கா முதன் முதலில் ஆடிஷனுக்கு சென்ற போது நிராகரிக்கப்பட்டார் குறிப்பிடத்தக்கது. பிறகு தன் உடல்வாகிற்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இன்று தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அனைத்து முன்னணி இயக்குனர்களிடம் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பது தான் கூடுதல் சிறப்பு.
ரஜினி, அஜித், விஜய் ,சூர்யா,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களான வெங்கடேஷ், பிரபாஸ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த பாகுபலி பல கோடிகளை வசூலித்தது சாதனை படைத்தது.

ஹிட் படங்கள் கொடுக்க ரசிகர் பட்டாளம் சேர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது இருக்கும் ஊரடங்கின் காரணமாக படவேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கிறார் ..

தனக்கு பிடித்த ஹீரோ ஹீரோயின்கள் ஊரடங்கில் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களின் ரசிகர்கள் அவர்களை சமூகவலைத்தளத்தில் பின்தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சராசரியாக இதுவரை இரண்டரை மில்லியன் followers அனுஷ்காவை பின்தொடர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த ஊரடங்கால் அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 மில்லியன் ஃபாலோவ்வர்ஸாக அதிகரித்துள்ளார். அதாவது 30 லட்சத்தை தொட்டுள்ளது இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தன்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











