3 கட்சியிலிருந்து என்னைக் கூப்பிடுது.. நமீதா தகவல்
சென்னை: என்னை 3 கட்சிகளிலிருந்து கூப்பிட்டுள்ளனர். நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
அலைகடலென பலரும் தேர்தல் களத்திலும், அரசியல் களத்திலும் பாய்ந்து வரும் நேரம் இது. அந்த வகையில் நமீதாவும் எப்போது அரசியலுக்கு வருவார் என்று பலரும் பதைபதைப்புடன் காத்துள்ளனர்.
அவரும் நான் நிச்சயம் அரசியலுக்கு வருது என்று தொடர்ந்து கூறி வருகிறார். அவர் அதில் சேரப் போகிறார், இதில் சேரப் போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் தற்போது 3 கட்சிகளிடமிருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளது என்று கூறியுள்ளார் நமீதா.
இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து....

அரசியலுக்கு கன்பர்மா வருது...
நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது.

அம்மா பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே...
இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விஷயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்.

உயிர் இங்குதானே.. அப்ப இங்குதானே பிரிய வேண்டும்
எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும்.

16 வயதில் வந்தேன்...
16 வயதில் நான் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். பெரும்பாலான கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.

மறக்க முடியுமா...
நான்கைந்து வருடங்களில் என்னை, தமிழ் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். நான் சென்னைக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது.

பாசத்தைப் பொழிகிறார்கள்...
இன்னும் என்னை, ரசிகர்கள் மறக்கவில்லை. தமிழக மக்கள், என்மீது அன்பு செலுத்துகிறார்கள். பாசமாக பழகுகிறார்கள்.

நாமளும் ஏதாச்சும் செய்யனும்ல...
பதிலுக்கு அவர்களுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும். அதை அரசியல் மூலம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன்.

நிறைய ஓட்டு வரும்
டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்துக்குப்பின், இந்திய மக்கள் மனதில் நிறைய மாற்றமும், விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த தேர்தலில் நிறைய ஓட்டுகள் பதிவாகும். ஒரு சின்ன கறுப்பு புள்ளிக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை இந்த தேர்தலில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார் நமீதா.
அடுத்து, நமீதா எந்தக் கட்சியில் எல்லாம் சேர வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சுக்கள் கிளம்பட்டும்....


Click it and Unblock the Notifications











