கல்யாண வதந்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை-ஜெனிலியா

By Chakra

Genelia
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும், நானும் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக வெளியான வதந்தியால் எனது வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார் ஜெனிலியா.

பாய்ஸ் படம் மூலம் நடிகையான ஜெனிலியி டிசவுசா இப்போது இந்தியிலும் பிரபலம். அவரும் ரிதேஷ்தேஷ்முக்கும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு இரு வீட்டுப் பெரியவர்களும் இதுவரை பச்சைக் கொடி காட்டவில்லை. இருந்தாலும் காதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகவும், ஒரே வீட்டில்தான் குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. இதைக் கேட்டு ஜெனிலியா அப்செட்டாகியுள்ளாராம்.

இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனது காதல் எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்யாணம் செய்து கொண்டு விட்டேன் என்று கூறுவதெல்லாம் தவறு. அந்த செய்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.

நான் ரகசியமாக கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. எதைச் செய்தாலும் சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்கிறார் ஜெனிலியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X