தமிழைப் புறக்கணிக்கும் சமந்தா
கெளதம் மேனனைத் தவிர வேறு யார் படத்திலும் தமிழில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு சமந்தா வந்துள்ளதாக கூறப்படுகிறது. கெளதம் மேனன் கேட்டால் எப்போது வேண்டுமானாலும் நேரம் ஒதுக்கிக் கொடுப்பாராம் - நடிக்க.
பாணா காத்தாடி மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்த சமந்தா. இவர் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக மங்காததா படத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் கெளதமுக்கும், அஜீத்துக்கும் முட்டிக் கொண்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் விசனப்பட்டிருந்த சமந்தாவை ஆறுதல்படுத்தும் வகையில் தெலுங்கில் தான் உருவாக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவை நாயகியாக்கி நடிக்க வைத்து அங்கு அவரை ஹிட்டாக்கி விட்டார் கெளதம் மேனன்.
இதனால் தனது மனதில் கெளதம் மேனனுக்கு தனி இடம் கொடுத்து வைத்துள்ளாராம் சமந்தா.
தெலுங்கில் தான் ஹிட்டாகி விட்டதால் தொடர்ந்து அங்கேயே நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் தன்னைத் தேடி வரும் தமிழ்ப் பட வாய்ப்புகளை கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து வருகிறாராம். அதேசமயம், கெளதம் மேனன் நடிக்கக் கூப்பிட்டால் மட்டும் உடனே ஒப்புக் கொண்டு விடுவாராம்.
இப்படித்தான் அனுஷ்காவும் தமிழில் அறிமுகமாகி தெலுங்குக்குப் போய் மீண்டும் தமிழுக்கு வர ரொம்ப பிகு செய்தார். இப்போது தமிழுக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்து கால்ஷீட்களை தாராளமாய் ஒதுக்கி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல இலியானாவும் தமிழில் அறிமுகமாகி, தெலுங்குக்குப் போனவர் மீண்டும் தமிழுக்கு வர ரொம்பவே டிமான்ட் செய்தார். ஆனால் அவரும் மறுபடியும் தமிழுக்கு வர வேண்டியநிலை வந்து விட்டது.
அந்த வரிசையில் சமந்தாவும் சேருவாரா அல்லது சமர்த்தாக இரு மொழிப் படங்களுக்கும் சம அந்தஸ்து கொடுத்து நடித்து புத்திசாலித்தனமாக பிழைத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











