'பறக்க' விரும்பும் வேகா!
பசங்க படம் மூலம் லைம்லைட்டுக்கு வந்த நடிகை வேகா இப்போது திரைப்படங்களில் நடிப்பதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு முழு நேர பைலட்டாகப் போகிறாராம்.
சரோஜா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேகா. ஆனால் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது பசங்க படம்தான். அதில் பால்வாடி டீச்சர் வேடத்தில் வந்து, விமலுக்கு ஜோடியாக அவர் நடித்த நடிப்பு அவருக்கு நிறையப் பெயரை வாங்கிக் கொடுத்தது.
பசங்க படத்திற்குப் பின்னர் தனி நாயகியாக நடிக்க அவர் உறுதியாக இருந்தாலும், பட வாய்ப்புகள் பிரமாதமாக வரவில்லை. தற்போது வானம் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டுவிட்டு பைலட்டாக முடிவு செய்துள்ளாராம் வேகா. இதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.
பைலட் பயிற்சியை முடித்த பின்னர், சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வராவிட்டால் முழு நேர விமானியாகும் திட்டத்தில் இருக்கிறாராம்.
அவர் பைலட்டான பின்னர், விமானத்தை ஓட்டும்போது, யாராச்சும் போன் செய்து அமெரிக்காவிலிருந்து பேசுறோம், உங்களுக்குப் பாராட்டு விழா வச்சுருக்கோம்னு போன் மட்டும் பண்ணிடாதீங்கப்பா...,டென்ஷனாயிடப் போறாங்க!


Click it and Unblock the Notifications











