நான் காத்திருப்பேன்- அஞ்சலி

கற்றது தமிழ் படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர் அஞ்சலி. ஆனால், தமிழ்ப் பட உலகில் நிலைத்து நிற்கத் தேவையான கவர்ச்சி வேடங்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
இதனால் அவருக்கு வாய்ப்புகள் வராமல் போக, கவர்ச்சி அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் ஆயுதம் செய்வோம் படத்தில். கைமேல் பலன். ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி கவர்ச்சி வேடங்களே வந்ததால் அவற்றை மறுத்துவிட்டாராம். இப்போது நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே படங்களை ஒப்புக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தற்போது தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறேன். இரண்டிலுமே வித்தியாசமான கேரக்டர்கள். உனக்கு இருக்கிற மார்க்கெட்டை வைத்து நிறைய படத்தில் நடித்து சம்பாதிக்கிற வழியப்பாரு, என நண்பர்கள் சிலர் யோசனை சொல்கிறார்கள்.
அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி ஒப்புக் கொள்வதாக இருந்தால் இந்நேரம் என் கைவசம் ஒரு டஜன் படங்கள் இருந்திருக்கும். ஆனால் அப்படி நடிப்பதில் விருப்பமில்லை.
நிறைய கதை கேட்கிறேன் எனக்கு பிடித்தமான அல்லது எனக்கு பொருந்துகிற மாதிரி கேரக்டர்கள் அமையவில்லை. நாலு பாட்டுக்கு ஆடி, நாலு சீன்ல அழுது கடைசியில காதலனே கதி என வழக்கமான கேரக்டரில் நடிப்பதில் விருப்பம் இல்லை.
நல்ல படத்துக்காக காத்திருப்பதில் தப்பில்லை. ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து எந்தப் படத்திலும் கவனம் செலுத்த முடியாத நிலையை தவிர்க்கவே விரும்புகிறேன்.
கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன், என்கிறார் அஞ்சலி.
அட, இதுகூட நல்லாருக்கே!


Click it and Unblock the Notifications











