அனுஷ்காவின் நம்பிக்கை

வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடனும், சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா.
இந்தப் படங்கள் தவிர மேலும் இரு படங்களில் அவர் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. தமிழ் படங்களுக்காக பல தெலுங்குப் பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம் இந்த முன்னாள் யோகா டீச்சர்.
தனது கோலிவுட் மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில்,
இரண்டு படத்துக்குப் பின் நான் நல்ல வாய்ப்புகளை தமிழில் எதிர்பார்த்தேன். அதற்காக சில மாதங்கள் வரை காத்திருந்தேன். ஆனால் வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கிலேயே செட்டிலாகிவிட்டேன். அங்கு நான் நம்பர் ஒன் நடிகை இன்றைய தேதிக்கு. இருந்தாலும் தமிழில் முன்னணி நடிகையாகும் ஆசை அப்படியே இருக்கிறது.
இதனால் தெலுங்கில் பில்லா தவிர வேறு புது படங்களை ஏற்கவில்லை. வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக, மருத்துவ கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறேன்.
பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. அடுத்து கார்த்தி ஜோடியாக சிறுத்தை படத்தில் நடிக்கிறேன். தமிழில் முன்னணி இடம் பிடிப்பதுதான் எனது நோக்கம். இந்த 2009- கோலிவுட்டில் என்னுடைய ஆண்டு..." என்றார்.
மகராசியா பிடிச்சிக்குங்க... யார் தடுத்தா!!


Click it and Unblock the Notifications











