அழகிய அனுயா!

பெரிய, பெரிய பாலிவுட் நடிகர், நடிகையர் படித்த புனே திரைப்படக் கல்லூரியிலிருந்து வந்திருப்பதால், ஆர்ட் டைப் நடிகையாக இருப்பாரோ என்று பயந்தால், அனுயா படு இயல்பாக இருக்கிறார்.
நடிக்க வரும் முன்பு மாடலிங்கில் படு பிசியாக இருந்தவர் அனுயா. டெலி பிலிம்களிலும் தலை காட்டியுள்ளார். டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
என்ன மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடிப்பேன். கிளாமர் மட்டும் காட்ட வேண்டும் என்றால் மட்டும் மாட்டேன் என்று தைரியமாக சொல்வேன். எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதில் எனது முழுமையான நடிப்பு தெரியும்.
ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லை. வில்லியாகவும் நடிக்க நான் ரெடி, கேரக்டர் ரோல் என்றாலும் ரெடி என்று எவரெடியாக இருக்கிறார் அனுயா.
கமல்ஹாசன்தான் அனுயாவுக்கு ஆதர்ச ஹீரோவாம். எனக்கு பொம்பளை கமல் என்ற பெயர் எடுக்க ஆசை. விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும். என்ன ரோல் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்கிறார் அனுயா.
நடிக்க மட்டும் இல்லை, நன்றாக டான்ஸ் ஆடவும் தெரியுமாம் அனுயாவுக்கு.
மகாராஷ்டிராவிலிருந்து வந்துள்ள அனுயாவுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











