சென்னைக்கு வரும் அருந்ததி!

ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் அனுஷ்கா. 'மொபைலா மொபைலா' பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் படு பசியாகி போன அவர் அங்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
தெலுங்குத் திரையுலகைக் கலக்கி வரும் அனுஷ்கா நடித்துள்ள லேட்டஸ்ட் படம் தான் அருந்ததி. அங்கு பெரும் அலையை ஏற்படுத்தியுள்ள பிரமாண்ட படம் அருந்ததி.
அவர் இரண்டு வேடங்களில் நடித்த, ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த படம்தான் அருந்ததி. இப்படம் தெலுங்கில் சக்கை போடு போடுவதைப் பார்த்த ஒரு தமிழ் திரையுலக தயாரிப்பாளர் அருந்ததியின் ரீமேக் உரிமைக்காக அலை மோதினார். ரூ. 4 கோடி வரை ரேட் பேசினார்.
ஆனால் அதற்கு மறுத்து விட்டார் அருந்ததி தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி. தானே இப்படத்தை தமிழில் கொண்டு வரப் போவதாக கூறி விட்டார்.
இந்த நிலையில் தெலுங்கு அருந்ததி இன்று செனனையில் ரிலீஸாகிறது. சத்யம் தியேட்டரி்ல் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை படம் திரையிடப்படும். அதற்குப் பிறகு எக்காரணம் கொண்டும் படம் நீடிக்கப்படாதாம்.
தெலுங்கைக் கலக்கிக் கொண்டிருக்கும் அனுஷ்காவின் கடைக்கண் பார்வை தன்னை சரிவர கவனிக்காமல் விட்டு விட்ட, கோலிவுட் மீதும் திரும்பியுள்ளது.
விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், விஷாலுடன் ஒரு படம் என கைவசம் 3 படங்களுடன் தமிழையும் கலக்க தயாராகி விட்டார் அனுஷ்கா.
முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் முதலிடத்தை பறிக்கவும் மும்முரமாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











