சாயாசிங்கின் டைரக்ஷன் கனவு!

ரொம்ப நாளைக்குப் பின்னர், ரொம்ப நாளைக்கு முன்னர் வெளியான வல்லமை தாராயோ படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார் சாயா சிங்.
நல்ல நடிகை என்ற பெயரை அப்படம் அவருக்கு வாங்கிக் கொடுத்தது.
அதன் பின்னர் சாயா சிங் குறித்த தகவல் இல்லை. ஆனால் அவர் இயக்குநராகும் வேகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறாராம் சாயா சிங். கதை கூட தயாராகி விட்டதாம். பெயரும் வைத்து விட்டாராம்.
நமது கலாச்சாரத்தை விட்டு விலகி, மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர் சமுதாயத்தைப் பற்றிய கதையாம் சாயாசிங் தயாரித்துள்ள கதை.
இதுகுறித்து அவர் கூறுகையில் காந்தி பஜார் என எனது படத்திற்குப் பெயர் வைத்துள்ளேன். படத்தின் காட்சிகள் நகைச்சுவை கலந்து இருக்கும்.
கையில் சில படங்கள் உள்ளன. அவற்றை முடித்து விட்டுத்தான் காந்தி பஜாருக்கு வர முடியும் என்றார் சாயா சிங்.
சாயா சிங் தற்போது ஷங்கரின் தயாரிப்பில் உருவாகும் அனந்தபுரத்தது வீடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாகா இயக்குகிறார் இப்படத்தை. இது ஒரு திகில் படம் என்பது தெரியும்தானே.
அப்ப, பயந்துருவோம்..


Click it and Unblock the Notifications











