மிஷ்கினை படுத்தி எடுத்த தீபா ஷா!
மிஷ்கின் இயக்கி வரும் யுத்தம் செய் படத்தின் நாயகி தீபா ஷா பெரும்பாடு படுத்தி விட்டாராம் மிஷ்கினை.
சேரன் நாயகனாக நடித்துள்ள படம்தான் யுத்தம் செய். இதில் நாயகியாக நடித்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த தீபா ஷா.
இவரை வைத்துப் படம் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் மிஷ்கினுக்கு. அந்த அளவுக்கு அனத்தல் தாங்க முடியவில்லையாம். அது வேண்டும், இது வேண்டும் என்று லிஸ்ட் போட்டு போட்டே மண்டை காய வைத்து விட்டாராம்.
தனி கேரவன் வேண்டும், இந்த சாப்பாடுதான் வேண்டும், ஹோட்டலில் இத்தனை வசதிகள் இருக்க வேண்டும் என்று டென்ஷனாக்கி விட்டாராம்.
இவரது டார்ச்சரை பொறுக்க முடியாத மிஷ்கின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து கடுப்பாக பேசியும் கூட அவர் அப்படியேதான் இருக்கிறாராம்.
தீபா ஷாவிடம் கிடைத்த அனுபவத்தால் இனிமேல் மும்பைப் பக்கம் கனவில் கூட போகக் கூடாது என்ற வரலாற்றுச் சிற்பபு வாய்ந்த முடிவுக்கும் வந்து விட்டாராம் மிஷ்கின்.
ஆனால் மலையாள நாயகிகள் எல்லாம் இப்படி சண்டித்தனம் செய்வதில்லையாம், சமத்தாக நடந்து கொள்கிறார்களாம்!


Click it and Unblock the Notifications











