நமீதா வீட்டில் தீ விபத்து!

கவர்ச்சி மோகினி நமீதா நுங்கம்பாக்கத்தில் பெரிய பங்களாவில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டில் நமீதாவும், வீட்டு வேலைக்காரர்களும் மட்டும்தான் இருக்கின்றனர். இவர்கள் தவிர மூன்று மெகா சைஸ் நாய்களும் வீட்டில் இருக்கின்றன.
இவர்களும் போக ஒரு கூர்க்காவும் பாதுகாப்புக்கு இருக்கிறார்.
நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் இந்திரவிழா படப்பிடிப்பு முடிந்து நமீதா வீடு திரும்பினார். படு டயர்ட் ஆக இருந்தவர் நேராக படுக்கை அறைக்குப் போய் ஏசியைப் போட்டுள்ளார்.
ஏசி மெஷின் ஓட ஆரம்பித்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே திடீரென தீப்பிடித்து அறை முழுவதும் புகை குபுகுபுவென பரவியது. பயந்து அலறிய நமீதாவின் குரலைக் கேட்டு வேலைக்காரர்கள் ஓடி வந்து அவரை வெளியேற்றினர்,
பின்னர் மெயின் சுவிட்ச்சை ஆப் செய்து ஏசியை நிறுத்திவிட்டு தீயை அணைத்துள்ளனர். தூங்கும் முன்பே இந்தச் சம்பவம் நடந்ததால் நமீதா உடனே தப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











