லோனாவாலாவில் 20 குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹன்ஸிகா!
இந்த ஆண்டு புத்தாண்டை அழகிய மலைவாசஸ்தலமான லோனாவாலாவில் கொண்டாடுகிறார், தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என வர்ணிக்கப்படும் ஹன்ஸிகா.
தனியாகவோ, சக நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்களுடனோ அல்ல... 20 குழந்தைகளுடன் இந்த புத்தாண்டை அவர் கொண்டாடப் போகிறார்.
லோனாவாலா என்பது மராட்டிய மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இந்தப்பகுதிக்கு 20 குழந்தைகளுடன் போய் புத்தாண்டை கொண்டாடப் போகிறாராம் அவர்.
இந்த 2011-ல் மூன்று தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார் ஹன்ஸிகா. அவற்றில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை ஆகிய இரு படங்கள் தோல்வியைத் தழுவினாலும், தீபாவளிக்கு வந்த வேலாயுதம் ஹிட்டாகிவிட்டது.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள இன்னொரு பெரிய படமான ஒரு கல் ஒரு கண்ணாடி வரும் 2012-ல் முதல் வெளியீடாக வரவிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications
