காஜலை 'ஓவர்டேக்' செய்த மோனிகா!

By Staff

Monika
ஏவி.எம்.மின் அஆஇஈ படத்தின் நாயகி வாய்ப்பு, காஜல் அகர்வாலுக்குப் போகவிருந்து, மயிரிழையில் நழுவி மோனிகாவிடம் வந்து சேர்ந்ததாம்.

ஏவி.எம்.கே சண்முகம் தயாரித்துள்ள படம் அஆஇஈ. இது தெலுங்கில் வெளியான சந்தமாமா படத்தின் ரீமேக். தந்தை - மகள் உறவைச் சொல்லும் படம் இது.

தெலுங்குப் பதிப்பில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். தமிழ்ப் பதிப்பிலும் அவரே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், பழனி படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்ததால், நிச்சயம் காஜலே இப்படத்தில் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தயாரிப்பாளர் சண்முகத்தின் எண்ணமோ வேறு மாதிரியாக இருந்தது.

தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய கேரக்டர் ஹீரோயினுடையது. எனவே தமிழ்ப் பெண்ணாக இருந்தால் சரியாக இருக்கும் என கருதிய அவர் மோனிகாவை நாயகியக்க பச்சைக் கொடி காட்டினார். இதையடுத்து காஜலுக்குப் போகவிருந்த வாய்ப்பு மோனிகாவை வந்தடைந்தது.

படத்தில் மோனிகாவின் தந்தையாக நடிகர் பிரபு நடித்துள்ளார். இருவரது நடிப்பும் படத்தில் பிரமாதமாக வந்துள்ளதாம்.

நடிகர் திலகம், ஏவி.எம், நதியா இணைந்த அன்புள்ள அப்பா சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இளையதிலகம், ஏவி.எம்., மோனிகா இணைந்துள்ள இந்தப் படம் மெகா ஹிட்டாகுமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X