என்னை செக்ஸி என்று அழைப்பதை விரும்புகிறேன் - பிபாஷா பாசு

பாலிவுட் கவர்ச்சிப் புயல் பிபாஷா பாசு தற்போது பெங்காலி மொழியில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் முதலாவது பெங்காலிப் படத்தில், கவர்ச்சியே இல்லாமல், குடும்பத் தலைவி வேடத்தில் நடிக்கிறாராம் பாசு.
ஆனால் தன்னை செக்ஸி என்று யாரேனும் அழைத்தால் அதையே தான் விரும்புவதாக கூறுகிறார் பிபாஷா.
இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சி இல்லாமல் நான் இல்லை. நான் செக்ஸியான பெண். அப்படித்தான் எல்லோரும் என்னை அழைக்க விரும்புகிறேன்.
அடுத்த வீட்டுப் பெண் தோற்றத்தில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. செக்ஸியாக இருக்கவே விரும்புகிறேன். 100 வயதானாலும் நான் செக்ஸியாக இருக்கிறேன் என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். செக்ஸியான பாட்டி என்று அப்போது எல்லோரும் என்னைச் சொல்ல வேண்டும்.
கவர்ச்சிகரமான பெண் என்று தன்னை யாரும் சொல்வதை ஒரு பெண் விரும்பாவிட்டால் அவர் முட்டாள் என்றுதான் பொருள். என்னை வித்தியாசப்படுத்திக் காட்டவே விரும்புகிறேன். அதற்கு அடுத்த வீட்டுப் பெண் தோற்றம் சரிப்பட்டு வராது. அது ரொம்ப போர் அடிக்கும் விஷயம்.
இன்னொரு விஷயம், செக்ஸி என்பது நமது உடல் தோற்றத்தை மட்டும் பொறுத்தல்லை. வேறு பல காரணிகளும் அதை நிர்ணயிக்கின்றன என்றார் பிபாஷா.


Click it and Unblock the Notifications











