காதலனுடன் ஓடிப் போகவில்லை-நடிகை சரண்யா

By Sudha

Saranya
காதலனுடன் ஓடிப் போகவில்லை என்றும் தான் பத்திரமாக இருப்பதாகவும் நடிகை சரண்யா கூறியுள்ளார்.

காதல் படத்தில் நடிகை சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா கடத்தி, சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக அவரது தாயார் மஞ்சுளா நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்தார்.

காதலனுடன் ஓடிப் போகவில்லை-நடிகை சரண்யா

காதலனுடன் ஓடிப் போகவில்லை என்றும் தான் பத்திரமாக இருப்பதாகவும் நடிகை சரண்யா கூறியுள்ளார்.

காதல் படத்தில் நடிகை சந்தியாவுக்கு தோழியாக நடித்த
சரண்யா கடத்தி, சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக அவரது தாயார் மஞ்சுளா நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்தார்.

சென்னை கோடம்பாக்கம் கங்காநகர் 1வது மெயின் ரோட்டில் வசிக்கும் மஞ்சுளா கொடுத்த புகாரில், சரண்யாவை பெற்ற தாய் நான்தான். என் கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்று வேறு திருமணம் செய்துகொண்டார். சரண்யாவை படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கினேன். கடுமையாக போராடி சரண்யாவை சினிமாவில் நடிக்க வைத்தேன்.

இப்போது மழைக்காலம் என்ற படத்தில் நடித்து வந்தாள். 3 மாதங்களுக்கு முன் அந்த படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளை யாராவது கடத்திச் சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.
பிரியா என்ற பெண்ணின் கட்டுப்பாட்டில் அவள் இருக்கலாம் என்று கருதுகிறேன். அவளை படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்லும் கார் டிரைவர் மீதும் சந்தேகம் உள்ளது.

பேராண்மை படத்தில் நடிக்கும்போது சந்தியாவுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் கிடைத்தது. அவளிடம் இப்போது ரூ.10 லட்சம் வரை பணம் இருக்கலாம். எனக்கு பண உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவள் பத்திரமாக இருந்தால், நல்லபடியாக வாழ்ந்தால் போதும்.

அவள் யாரையாவது காதலிப்பதாக சொன்னால் அதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். என் மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் சரண்யா கூறுகையில், என் அம்மாவுக்கும், எனக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அம்மாவுடன் என்னால் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் அம்மாவை விட்டு நான் பிரிந்து வந்து விட்டேன். என் தோழியின் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் இருக்கும் இடத்தை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

எனக்கு யாருடனும் காதல் இல்லை. இப்போது நடிப்பின் மீதுதான் என் முழு கவனமும் இருக்கிறது. நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

எங்களுக்குள் உள்ள ஒரு சின்ன விஷயத்தை என் அம்மா பெரிதுபடுத்தி பிரச்சனையாக்கிவிட்டார். அது தான் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X