மாணவர் தினத்தில் காஜல்!

By Staff

Kajal Agarwal
பழனி புகழ் காஜல் அகர்வால் அடுத்து கதிர் இயக்கத்தில் உருவாகும் மாணவர் தினம் படத்தில் வினய்யுடன் இணைந்து திறமை காட்ட வருகிறார்.

இதயம், காதல்தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என காதலை மையமாக வைத்து புது வரலாறு படைத்தவர் கதிர். சமீப காலமாக அவரைக் காணவில்லை - அதாவது அவரை பெரிய திரைப்பக்கம் காண முடியவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புத்தெழுச்சிக் கதையுடன் புறப்பட்டிருக்கிறார் கதிர். இந்தமுறை அவர் கையில் எடுத்திருப்பது மாணவர் தினம்.

மாணவர்களை இதுவரை யாரும் காட்டியிராத கோணத்தில் இப்படத்தில் காட்டப் போகிறாராம் கதிர். காதல் தேசம் போல இந்தப் படமும் புதுமையும், பிரமாண்டமும் இணைந்ததாக இருக்குமாம்.

கதிரின் மாணவராக வினய் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடி போடப் போவது காஜல் அகர்வால். ஆரிய பவன் ஸ்வீட் போல இருக்கும் காஜலுக்கு பொம்மலாட்டம்தான் முதல் தமிழ்ப் படம். ஆனால் அப்படம் வெளிவருவதில் ஊசலாட்டம் நிலவிக் கொண்டிருக்கிறது.

அதற்குப் பிறகு தயாரான பழனி, காஜலுக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் காதல் புகழ் கதிருடன் இணைகிறார் காஜல்.

வழக்கம் போல இந்தப் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை.

செப்டம்பரில் படத்தைத் தொடங்குகிறார் கதிர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X