'கொழுக் மொழுக்' மதுஸ்ரீ... வழிவிடு கண்ணே வழிவிடு!
கோலிவுட் ரசிகர்களுக்குப் பிடித்த கொழுக் மொழுக் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு மதுஸ்ரீ.
வழிவிடு கண்ணே வழிவிடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குகிறார்கள் அலிகான் -கௌரிசங்கர் என்ற இரட்டையர். சார்லி, டி.பி. கஜேந்திரன் என உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
என்ன படம் இது.... எதற்காக இந்த டைட்டில்?
"மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியமானது தான். ஆனால் அதைவிட முக்கியமானது அன்பு. அந்த அன்பை நமக்கு முதலில் காட்டுபவள் தாய். அத்தகைய அன்பின் உருவமான தாயை வயதான காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அது தான் கதைக் களம்.
தாயை மதிக்காமல் திரிபவனின் கதி என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாக கூறியுள்ளோம். திரைக்கதை முற்றிலும் புதிய பாணியில் இருக்கும்," என்கிறார்கள் இயக்குநர்கள்.
சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் இசையை கேட்டார்களோ இல்லையோ... புது நாயகி மதுஸ்ரீயின் கவர்ச்சி விருந்தை கண்களால் பருகத் தவறவில்லை!


Click it and Unblock the Notifications











