இந்திர விழாவிலிருந்து மாளவிகா விலகல்

By Staff

Malavika
ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார்.

முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர்.

மாளவிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை மலேசியாவில் படமாக்க ராஜேஷ்வர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் மாளவிகா திடீரென படத்திலிருந்து விலகி விட்டாராம். என்ன காரணம் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதாக மாளவிகா காரணம் கூறியுள்ளதாக தெரிகிறது.

விலகி விட்ட மாளவிகாவுக்குப் பதில் வேறு நடிகையைப் போட இப்போது ராஜேஷ்வர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளார்.

கல்யாணமான பின்னர் தொடர்ந்து நடித்தது போல குழந்தை பெற்ற பிறகும் மாளவிகா நடிப்பாரா என்ற புதிய கவலையில் திரையுலகம் ஆழ்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X