மீண்டும் கமலுடன்..- மோகன்லால்

சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் மனம் திறந்து கமல்ஹாசனை மலையாளத்திற்கு அழைத்துள்ளார் மோகன்லால்.
சமீபத்தில் கமல்ஹாசன், மோகன்லால் இணைந்து நடித்த உன்னைப் போல் ஒருவன் படம் பிரமாண்ட வெற்றியுடன் சக்கை போடு போட்டு வருகிறது. இதில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கமல்ஹாசனை விட மோகன்லாலுக்கே இந்தப் படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு. இதனால் மகிழ்ந்து போன மோகன்லால், கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கமல்ஹாசனுடன் இணைந்து எதிர்காலத்தில் நிறையப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.
உண்மையில், கமல் மிகப் பெரிய ஜீனியஸ். அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. மீண்டும் அவர் மலையாளத்திற்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதை ஒரு அழைப்பாக அவருக்கு விடுக்கிறேன். அவருடன் இணைந்து மலையாளத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
உண்மையில் மலையாளம் அவருக்குப் புதிதல்ல. அவருக்கு அது சொந்த வீடு போல. இங்குதான் அவர் முதல் முறையாக நாயகன் ஆனார். எனவே மீண்டும் அவர் மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோகன்லால்.


Click it and Unblock the Notifications











