மீண்டும் நகுல்- சுனைனா

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பு காதலில் விழுந்தேன். முதல் படத்திலேயே வெற்றி முததிரை பதித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீது கோலிவுட்டின் ஒட்டு மொத்த கண்களும் பதிந்துள்ளன.
சன் பிக்சர்ஸுடன் இணைந்து படங்கள் கொடுக்க நடிகர்களும், இயக்குநர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனராம்.
விரைவில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தெனாவெட்டு படத்தை சன் பிக்சர்ஸ், வெளியிடவுள்ளது. மேலு் பல படங்களும் வரிசையாக வெளிவரவுள்ளன.
இந் நிலையில் காதலில் விழுந்தேன் ஜோடியான நகுல், சுனைனாவை வைத்து இன்னொரு படத்தை உருவாக்கவுள்ளது சன் பிக்சர்ஸ். படத்திற்கு ராணி அண்ணா நகர் என பெயரிட்டுள்ளனர்.
இதுவும் இக்காலத்து இளசுகளுக்கேற்ற காதல் கதைதானாம். படத்தை ரவீந்திரன் என்பவர் இயக்கவுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications