ஓரம் கட்டிய நமீதா!

தீ படம் மூலம் இரண்டாவது முறையாக ராகினி, சுந்தர்.சியுடன் இணைகிறார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் சண்டை. இப்படத்தில் ராகினியின் கவர்ச்சி தீ, அவருக்கு கோலிவுட்டில் தனி இடத்ைத கொடுத்திருக்கிறது.
இருந்தாலும் சுந்தர்.சியுடன் தனது 2வது படத்ைத நடித்துக் கொண்டிருக்கிறார் ராகினி. இவர் குஷ்புவுக்கு தூரத்து சொந்தக்காரர் என்பது தெரியும்தானே!
தீ படத்தில் நாயகி ராகினி என்றாலும் படத்தில் நமீதாவுக்குத்தான் சூப்பர் டூப்பர் கிளாமர் ரோல். படம் முழுக்க ராகினி வந்தாலும் கூட, 2வது நாயகி ரேஞ்சுக்கு நடித்து வரும் நமீதாவின் ரோலில்தான் ஜிலுஜிலுப்பும், கிளுகிளுப்பும் அதிகமாம்.
சண்டை படத்தில் சின்னதாய் மேனி காட்டிப் போயிருந்த நமீதா, இப்படத்தில், கவர்ச்சியில் பின்னி எடுத்திருக்கிறாராம். கவர்ச்சித் தீயாக மாறியிருக்கும் நமீதாவின் எத்தனை சீனை சென்சார்காரர்கள் வெட்டித் தள்ளப் போகிறார்களோ என்ற பயமும் படக்குழுவிடம் இருக்கிறதாம்.
இது ஒரு அடிதடி, ஆக்ஷன் படம். போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுந்தர்.சி, தடாலடியாக ரவுடியாக மாறிப் போகிறார். அத்தோடு நில்லாமல் அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுக்கிறார். இதனால் படம் முழுக்க அனலாம்.
இப்படிப்பட்ட அனல் படத்துக்கு ராகினி, நமீதா மட்டும் போதாது, இன்னொரு கிளாமரும் இருந்தால்தான் ரசிகர்கள் கூலாக படம் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications











