ரஜினியின் சக்தி... நயன் புல்லரிப்பு

By Staff

Nayantarara with Rajini
இன்றைய இளைம் ஹீரோக்களை விட விட பல மடங்கு சுறுசுறுப்பானவர் சூப்பர்ஸ்டார் ரஜினி. எனக்குத் தெரிந்து ஹீரோ என்ற சொல்லுக்கு முழுவதும் பொருத்தமானவர் அவர் ஒருவர்தான்... என்று ரஜினியின் புகழ் பாடுகிறார் நயன்தார்.

சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக வந்த நயன்தாரா, பின்னர் சிவாஜி படத்தில் அவருடன் ஒரு பாட்டுக்கு ஆடினார். இப்போது குசேலன் மற்றும் அதன் தெலுங்குப் பதிப்பு கதாநாயகுடு ஆகிய இரண்டு படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

பொதுவாக ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் தொடர்ந்து 4 படங்களில் இடம் பெற்றிருப்பதன் ரகசியம் என்ன?

இதோ அவரே சொல்கிறார்:

சூப்பர் ஸ்டாருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகமிருப்பதாகக் கூறுகிறார்கள். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. ரஜினி சாரைப் பொறுத்தவரை வயது என்பது வெறும் ஆண்டுக் கணக்குதான். வயதை வென்ற இளைஞர் ரஜினி. குசேலனில் அவரது தோற்றத்தைப் பார்த்தவர்கள் இன்னொரு முறை அவர் வயதைப் பற்றி நிச்சயம் பேச மாட்டார்கள்.

இன்றுள்ள எல்லா இளம் ஹீரோக்களை விடவும் அதிக சக்தி மிக்கவர் ரஜினி. உடலாலும் மனதாலும் உறுதியானவர். அவருக்காக உயிரைக் கொடுக்க லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இதை நான் என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

பழகும் தன்மையில் அவருக்கு நிகர் யாருமில்லை... நான் துன்பத்தில் துவண்டுபோயிருந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கையும் தைரியமும் தந்தவர் அவர். அவருடன் நடித்தது என் கேரியருக்கே அர்த்தத்தைத் தந்துவிட்டது.

நான் இப்படிச் சொல்வதை மற்ற ஹீரோக்கள் யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம், அவர்கள் திரையில் ரஜினியைப் பற்றிச் சொல்வதை, நான் நிஜத்தில் சொல்கிறேன். அவ்வளவுதான்.

குசேலனில் எனக்கு கவுரவ வேடம் என்று சொல்லப்பட்டாலும், ரஜினி சாருடன் இரண்டு பாடல்களில் டூயட் பாடியிருக்கிறேன். அவர் வருகிற காட்சிகளிலெல்லாம் நானும் வருகிறேன். அதுவே போதும், என்றார் நயன்.

ரஜினிக்கு அசத்தலான கொ.ப.செ. கிடைச்சிட்டாங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X