பொக்கிஷம்: பத்மப்ரியாவின் 'டபுள் ரோல்'!

By Staff

Padmapriya
மீண்டும் இயக்குநர் சேரனின் உதவி இயக்குநர் கம் ஹீரோயினாக அவதாரமெடுத்துள்ளார் நடிகை பத்மப்ரியா.

சேரன் இயக்கி நாயகனாக நடித்து தேசிய விருது பெற்ற தவமாய் தவமிருந்து படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பத்மப்ரியா. அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்தாலும், மிருகம் படத்தில் இயக்குநர் சாமியுடன் ஏற்பட்ட பிரச்சினையில்தான் பரபரப்பாகப் பேசப்பட்டார்!

இப்போது பொக்கிஷம் படத்தில் மீண்டும் சேரனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சேரனுக்கு நாயகியாக மட்டுமின்றி, உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார் பத்மப்ரியா. ஏற்கெனவே தவமாய் தவமிருந்து படத்திலும் இதே வேலையைச் செய்தவர்தான் என்பதால், இவருக்கு தற்போது முதன்மை உதவி இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 7 மணிக்கே படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிடும் பத்மா, ஒரு உதவி இயக்குநரின் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறாராம்.

எதிர்காலத்தில் நானும் படங்கள் இயக்குவேன். அதற்கு இந்த அனுபவம் உதவும். சேரன் என்னுடைய குரு. எனது எழுத்தார்வத்தைப் புரிமந்துகொண்டு முதல் படத்திலேயே அதற்கு வாய்ப்பையும் அதற்கான கௌரவத்தையும் அளித்தவர். அவரிடம் வேலை பார்ப்பாது மிகவும் சந்தோஷம், என்கிறார் பத்மப்ரியா.

இப்போது கமல்ஹாசனின் மர்மயோகியிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பத்மப்ரியா அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய பத்மா, கமல் சார் அழைத்திருப்பது உண்மைதான். ஆனால் இதுபற்றி அவரே அறிவிப்பதுதான் சரியாக இருக்கும் என்றார்.

புதுசா பஞ்சாயத்து கிளம்பாம இருந்தா சரிதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X